Saturday, 1 August 2020

ஸ்பைடர் மேன் தினம் (SPIDER MAN DAY) in tamil

SPIDER MAN:


              ஸ்பைடர் மேன் (SPIDER MAN) என்றாலே நம் (90's kids) நினைவிற்கு வருவது ஸ்பைடர்மேன் படத்தில் நடித்த  TOBEY MAGUIRE தான். 

Spider man Tobey maguIre
Spider man(TobeyMaguire)

              ஸ்பைடர் மேன் படத்தில் பீட்டர் பார்கராக நடித்தவர்  TOBEY MAGUIRE. ஆனால் ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பற்றி உங்களுக்கு தெரியுமா!?

சூப்பர் ஹீரோ உருவாக்கம்:


                சூப்பர் ஹீரோவாக, கற்பனை செய்யப்பட்ட கதபாத்திரமே ஸ்பைடர் மேன். அக்கதாபாரத்தினை Stan Lee மற்றும் Steve ditko என்பவரால் உருவாக்கப்பட்டது.

               அவர்கள் ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை ஆகஸ்ட் மாதம் 1962 ஆம் ஆண்டு "AMAZING FANTASY" என்ற நகைச்சுவை புத்தகத்தில் அறிமுகப்படுத்தினர்.

                அவர்கள் எழுதிய கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் SPIDER MAN (2002) என்கிற திரைப்படம். இதில் ஒரு அமெரிக்கா இளைஞனாக நடித்தவர் TOBEY MAGUIRE.  இந்த படத்தை SAM RAIMI என்பவர்  இயக்கினார்.  2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று 100 மில்லியன் டாலரை ஒரு வார இறுதிக்குள் கொடுத்தது.

கதை சுருக்கம்:


                     ஸ்பைடர் மேன் படத்தில் "பீட்டர் பார்கர்" என்ற இளைஞன், தனது பெற்றோரை இழந்து அத்தை "May" மற்றும் மாமா "Ben" வுடன் நியூ யார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  பள்ளி பயணமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரபியல் ஆய்வகத்திற்கு தனது நண்பன் osborn மற்றும் அவரது காதலி Mary Jane watson ஆகியோரோடு செல்கிறார். அங்கே மரபுசார் வடிவமைப்பு பெற்ற சூப்பர் சிலந்தி (Genetically Modified Super Spider) ஒன்று பீட்டரை கையில் கடித்திவிடுகிறது. அவர் சாதாரண சிலந்தி என்று பெரிதாய் பொருட்படுத்தவில்லை. 

                       அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது, அவரால் கண்ணாடி (specs) இல்லாமல் அனைத்தையும் சுலபமாக பார்க்க முடிந்தது... அது மட்டும் இல்லாமல் அவரது உடல் நல்ல கட்டுடன் இருப்பதை கண்டு ஆசரியப்பட்டார். பின், அவர் உடல் சிலந்தி வலையை உற்பத்தி செய்வதைக் கண்டுபிடிக்கிறார். முன்னை விட அதிகமான சக்தியை  தன் உடல் பெற்றிருப்பதை அவரால் உணர முடிகிறது.   சிலந்தியின் வேகம், வலிமை, வலையால் சுவரில் ஒட்டி கொள்வது, ஆபத்தான நேரங்களில் துள்ளியமாக செயல் படுவது, எதிரிகளை தன் சூப்பர் பவரால் வெல்வது ஆகிய காட்சிகளை பிரமிப்பூட்டும் வகையில் திரையி்ட்டு இயக்குணர்கள் சாதித்தனர்...

கருத்து:


               "Great power comes with great responsibility"!

                 "அதிக சக்தி கிடைத்தால் அதிக பொறுப்பும் வரும்"!

                 "இதில் வேடிக்கை  என்னவென்றால் படத்தைப் பார்த்துவிட்டு சிலந்தி கடித்ததால் நாமும் ஸ்பைடர் woman ஆக மாறிவிடலாம் என்று எண்ணியது தான்😂....!!!"

                  பின்  2004 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் 2(Spider Man 2)
மற்றும் 2007 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் 3(Spider Man 3) ஆகிய படத்தையும் அப்படக்குழு இயற்றியது. அதன் பின்னர் ஸ்பைடர் மேன் கதையை MARVEL COMICS என்ற நிறுவனம் தன் வசப்படுத்தி "AMERICA COMIC BOOKS"ல் வெளியிட்டது. பின் மார்வல் நிறுவனம் இயற்றிய கதைகள், படங்கள் எராலம்.

ஸ்பைடர் மேன் தினம்
Spider man

SPIDER MAN DAY:

        1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான AMAZING FANTASY யில் இடம் பெற்ற சூப்பர் ஹீரோவுக்காக இன்று ஸ்பைடர் மேன் தினம் என்று கொண்டாடப்படுகிறது.!!!  





1 comment:

Thank you for reading my blog!

;