அது இருந்தால் இது இல்லை!இது இருந்தால் அது இல்லை!!
"வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம்
ஆனால் வாசம் இல்லை
மல்லிகைக்கோ வாசம் அதிகம்
ஆனால் ஆயுள் இல்லை"
ம்ம் ம்ம் ம்ம் ........
"கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை
வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை
கருங் குயிலுக்கு தோகை இல்லை
தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை"
ம்ம் ம்ம் ம்ம் ........
"நீருக்கு நிறம் இல்லை
நெருப்புக்கு ஈரம் இல்லை
காற்றுக்கு உருவம் இல்லை
கதிரவனுக்கு நிழல் இல்லை"
"இருக்கு ஆனா இல்லை" என S.J.சூர்யா படத்தில் சொல்வது போல்...
இருக்கு ஆனா இல்லை |
கால் இருக்கவனுக்கு சைக்கிள் இல்லையேன்னு கவலை...
சைக்கிள் இருக்கவனுக்கு கார் இல்லையேன்னு கவலை...
கார் இருக்கவனுக்கு பஸ் இல்லையேன்னு கவலை...
பஸ் இருக்கவனுக்கு ட்ரெயின் இல்லையேன்னு கவலை...
ட்ரெயின் இருக்கவனுக்கு flight இல்லையேன்னு கவலை...
Flight இருக்கவனுக்கு சந்திரனுக்கு போக விண்கலம் இல்லையேன்னு கவலை...!!!
இவை எல்லாவற்றையும் இழந்தாலும் பிழைக்க கால் இருக்கு என்று நம்பி முயற்சி செய்பவன் தான் வாழ்வில் வெற்றி பெறுவான்...
எல்லாருடைய வாழ்விலும் ஒன்றைப் பெற்றும், ஒன்றை இழந்தும் இருக்கலாம். எல்லாவற்றிற்கும், ஏதோ ஒரு காரணம் இருப்பதை மட்டும் நம்புங்கள். அந்த காரணம் நல்லதாகவே இருக்கும் என புரிந்து கொண்டு வாழுங்கள்...
"எது இருந்தாலும்! இல்லாவிட்டாலும்!! உங்கள் புன்னகையை மட்டும் என்றும் மறந்துவிடாதீர்கள்!!!"
ஸ்மைல் பிலிஸ்...😃
SMILE PLEASE...💕
Good
ReplyDeleteNice..
ReplyDelete