ஏன்? எனக்கு மட்டும் ஆசைப்பட்டது ஏதும் கிடைக்கவில்லை?
வாழ்வில் அனைவரும் ஏதோ ஒன்றிற்கு ஆசைப்பட்டிருப்போம். ஆனால், அது வெறும் ஆசையாகவே முடிந்திருக்கும். ஏன்? எனக்கு மட்டும் ஆசைப்பட்டது ஏதும் கிடைக்கவில்லை? என்று புலம்பிருப்போம்... எல்லாவற்றிருக்கும் காரணம் ஒன்றே!
"நமக்கு அது தேவை" என்ற எண்ணம் எவ்வளவு நாள் நம்மைப் பின் தொடர்கிறதோ... அதைப் பொறுத்தே நம் ஆசை நிறைவேறும்...
அதற்கு முதலில் நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
ஆசையை தேடக்கூடியது மனிதகுலம்... எதற்காக? ஏன்? என்று தெரியாமல்... அவ்வாறு ஏதும் அறியாமல் ஆசைப் பட்டால் அது நமக்கு கிடைப்பதற்கான சாத்தியம் குறைவே. ஆகையால் நம் ஆசை சரி தானா என்று உணர்ந்து அதனை பின் தொடருங்கள்.
"எல்லாவற்றிற்கும் ஆசைப்படும் தகுதி உனக்கு உண்டு... ஆனால் நீ ஆசைப்பட்ட அனைத்திற்கும் உன்னை வந்தடையும் தகுதி இல்லை... தகுதி உள்ளவை மட்டுமே உன்னோடு நிலைத்து நிற்கும்..."
ஆசைப்படுவது ஒன்றும் தவறில்லை! ஒருவருடைய ஆசை தான் அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
"உலகம் இயங்குவதற்கு காரணமும் ஆசை தான்!
அழிவதற்கு காரணமும் ஆசை தான்!
ஆசையை அடக்க ஆசைக் கொள்கிறான்!
ஆசையை அடைய பேராசைக் கொள்கிறான்!
ஆசை உள்ளத்தையும் ஆளும்!உலகத்தையும் அழிக்கும்"
அதனால் தான் எதற்கு? ஏன்? எதன் மீது ஆசைக் கொள்கிறோம் என்று தெரிந்து ஆசை படுங்கள்...
"வாழ்க்கை நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்!!! அதை பற்றிக் கொள்ள தயாராக இருங்கள்...
Aasaikum perasaikum nadakara porla jeikarathu perasa than.....Thanioruvan bgm rolls😎😎😎
ReplyDeleteLoved it
ReplyDelete