நண்பர்கள் தினம்:
என்னடா இரண்டு நாலு முன்னாடி தான friendship day வந்துச்சு மறுபடியும் இன்னைக்கு friendship day வருதுனு பாத்தா... இன்னைக்கு இந்தியாவில் நண்பர்கள் தினமாம்.... ஆம்.... ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை தான் நாம் நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இதை பார்த்த பிறகு சும்மா இருக்க முடியுமா... சொல்லுங்க நண்பர்களே!!! சோ, வாட் ஐ டூ இஸ்... விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்துருக்கேன்....
நண்பர்கள் தினம் என வந்துவிட்டால் தற்போதைய இளைஞர்கள் கேக் வெட்டுவது, பைக் எடுத்து ஊரைச் சுற்றுவது என பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள்.
ஆனால், 90's kids ஆன நாங்கள் பத்து ரூபாய்க்கு friendship band வாங்கி கையில் கட்டி விட்டு...
Friendship day |
கடலைமிட்டாய், தேன்மிட்டாய், கமரகட்டு, இன்னும் பல ஐம்பது பைசா மிட்டாய்களை வாயில் போட்டுக் கொண்டு...
"பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..."
"உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்..."
"என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்..."
-னு பாட்டு பாடிச் சுற்றியவர்கள்...
அட! அட!! என்ன வரிகள்...!!!
அந்த காலத்து பாடல் வரிகள் நட்பின் மேன்மையை உணர வைக்கிறது...
இத விட"தளபதி" படத்தில் ஒரு டயலாக் வரும் பாருங்க...
"நட்புனா என்னனு தெரியுமா உனக்கு...?!
நண்பனா என்னனு தெரியுமா உனக்கு...?!
சூர்யானா என்னனு தெரியுமா உனக்கு...?!"
என்று சூப்பர் ஸ்டார் சொல்லும் பொழுதும் நட்பின் மீது உள்ள நம்பிக்கையை நம்மால் உணர முடகின்றது...
அதிற்காக 2k kids ஐ நான் குறை கூறவில்லை... " நண்பன்ல ஏது மா? நல்ல நண்பன், கெட்ட நண்பன்... ?? நண்பனாலே நல்லவன் தான்...😍"
எனது Blog ஐ படிக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழத்துக்கள்...!!!
(குறைந்த நேரத்தில் எழுதியது. எனது நண்பர்களை பற்றி பின்பு ஒரு Blog எழுதுகிறேன்...)
😊👍
ReplyDelete,🤗🤗🤗🤗🤗🤗🤗
ReplyDelete