Showing posts with label Nature is a dream. Show all posts
Showing posts with label Nature is a dream. Show all posts

Tuesday, 4 August 2020

விழுவதும் அழகே!!!

விழுவதும் அழகே!!!



ஆம்! விழுவதும் ஒருவகையில் அழகே...!!!


"எழுவதில் அழகு இமயமென்றால்...

விழுவதில் அழகு அருவி...!!!"


Waterfalls near me
Water falls for a new beginning!


" வளைவதில் அழகு வில்லென்றால்...

வளைந்து கொடுப்பதில் அழகு மனிதன்...!!!"


--> வளைந்து கொடுப்பதால் நீ வீழ்வதும் இல்லை.... விழுவதால் அருவி வளைந்து கொட்டுவதும் இல்லை...


"விழுவதும்! வளைவதும்!! நம்முடைய

தன்மையே அன்றி, பிறர் மீது உள்ள பயம் அல்ல...!!!"





Monday, 3 August 2020

பட்டாம்பூச்சி ஏனடா??? ஆமையைப் போல் வாழட!!!

பட்டாம்பூச்சி ஏனடா???


       வாழ்க்கைப் பட்டாம்பூச்சியைப் போல் வண்ணமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவர். ஆனால், அவர்கள் வாழ்வோ ஆமையை போல் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வருந்துவர்...


           பட்டாம்பூச்சி தன் கூட்டிற்குள் வளரும் காலமோ வெறும் இருபத்து ஒரு நாட்கள் மட்டுமே. வளர்ந்து பூமியில் சில பகுதியைச் சுற்றித் திரியும் காலமோ ஓரிரு மாதங்கள் தான்... ஆனால், ஆமை  ண்பது ஆண்டு காலம் கடலின் ஆழத்தில் வளம் வந்து, அக்கடலையே கடக்கும் வலிமை வாய்ந்தது...


             நீங்கள் ஆமையை போல் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை... பட்டாம்பூச்சியைப் போல் வேகமாக சுற்றித்திரிய வேண்டும் என்று எண்ணி அழிந்துவிடாதீர்கள்...


Tortoise Turtle images
TORTOISE


             பட்டாம்பூச்சியை போல் colourful la இருக்க வேண்டும் என்று நீங்கள் ஓடினாள் தோல்வி தான் மிஞ்சும்... ஆமையைப் போல் careful la இருக்க வேண்டும் என்று ஓடி பாருங்கள்... வெற்றி கிட்ட நேரம் எடுத்தாலும்...! தோல்வி ஒரு நாளும் உங்களை துரத்ததாது...!!!



  "Don't be a Butterfly & waste your life in days, 

Be a Tortoise & live your life for centuries by exploring the ocean(world)..."


       



Sunday, 2 August 2020

Nature is a dream! இயற்கை தான் கனவு!

இயற்கை தான் கனவு!


                       நானும் என் தோழியின் தங்கையும் காரில் வேலூர் சென்ற போது எடுத்த புகைப்படம் இது...

Nature is a dream
இயற்கை தான் கனவு!

                      "பஞ்சு மிட்டாயை போல் இருக்கும் மேகக் கூட்டங்களைப் பார்க்கும் போது... அப்படியே கையில் எடுத்து ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறது...!" நான் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பேன் என்று தெரிந்திருந்தால்... நான் சினிமாவில் சேர்ந்த்திருப்பேன்!"  ம்ம்...  "இந்தப் படம் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறது என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது..."  யார் என்ன சொன்னாலும் "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு போல்." நான் எடுத்த இந்தப் புகைப்படம் எனக்கு அழகாக தான் தெரிகிறது...!!

                        புகைப்படத்தை பார்த்த படியே கனவுக்குள் நான்.........

                       "என்னைச் சுற்றி தென்னை மரங்களும், வயல்களும், காற்றில் அசைந்தாட, ஒரு சிறிய வீடொன்று எனக்கென்று சொந்தமாய் இருக்க, வயல் சேற்றின் வாசம் காற்றில் மூக்கைத் தொலைக்க, ஆடு,மாடு, கோழி எல்லாம் உற்சாகமாய் சத்தம் போட, வானத்தைப் பார்த்து கண்ணை மூடிய படி கயிறு கட்டிலில் நான் படுத்துக் கொண்டிருக்க, மனம் நிம்மதியாய் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தது...!"

                          என் மன நிம்மதியை எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் என்னால் அடைய இயலாதது போன்று ஒரு எண்ணம்.... அதை எல்லாம் அனுபவைத்துப் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும். "நீ என்ன எல்லாவற்றையும் அனுபவைத்து விட்டாயா?" என்று கேட்காதீர்கள். என் கனவிற்கு எல்லையே இல்லை...             

                           திடீரென்று ஒரு குரல்! இளநீர் குடிக்க வாடி என்று அம்மா அழைத்தால். "என் கனவை களைப்பதே இவளுக்கு வேலை என்று புலம்பியபடி சென்றேன்..."

                           நாங்கள் இருப்பதோ வயல்கள் இல்லாத கட்டிட மாடி வீட்டில். நாங்கள் வீடு கட்டி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் பத்தாம் வகுப்பு படித்த போது கட்டியது... பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் எந்த ஒரு வீடும் இருக்காது. சுற்றி மாங்காய் மரங்களும், மண் தரையுமாய் இருந்தன.. ஆனால், இப்பொழுதோ ஒரு  மாங்காய்மரத்தையும் காணோம், எல்லாம் ஃபிளாட்டாக (flat) மாறிவிட்டது. மாலை நேரங்களில் மாங்காய் மரத்திலிருந்து "ஜில்" "ஜில்" என்று வீசிய காற்று இன்றும் என் நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது எல்லாவற்றையும் கனவில் மட்டுமே காணமுடிகிறது....

        "நகரம்" "நரகம்" ஆகும்.

            " கரம்" மாறினால்!!! 


                   என்ற சந்தான பாரதியின் கூற்று சரியாகத் தான் உள்ளது?! (நான் "க" இடம் பெயர்தலை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்...)

By,.   
JAANU
;