Saturday, 8 August 2020

Parenting Tips to Fullfill Children's Wish in tamil

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


               "தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்." என்று திருவள்ளுவர் தனது குறலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய படி பெற்றோர் நடந்து கொள்கின்றனரா என்பது தான் பெரிய ???

              சிறு வயதில் ஒரு குழந்தை மற்றவர் சொல்வதைக் கண்டு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுருக்கும். ஆனால், பாடச் சுமையால் படிப்பில் ஆர்வம் இழந்து நாளடைவில் அந்தக் குழந்தைத் தன் ஆசையை விடுத்து வேறு ஒன்றின் மேல் நாட்டம் கொள்ளும்.


               அவ்வாறு குழந்தை தன் ஆசையை மாற்றுமே ஆயின் அஃது அவர்களுக்கு தேவைப்படக் கூடிய அல்லது அவர்களே ஆசைப்பட்ட ஒன்று அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் சொல்வதைத் தான் நீ படிக்க/செய்ய வேண்டும் என்று​ கூறினால்... உங்களை என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை...


"பிறர் ஆசையை தன் ஆசையாய் கொண்டவன் இறைவன்...

பிறர் ஆசையைக் கொன்று தன் ஆசையைக் கண்டவன் அரக்கன்..."


                சில குழந்தைகள் தன்னால் முடியாது என்று எண்ணி தன் ஆசையை மாற்றிக் கொள்வர். உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோர் அவர்களுக்கு விதைப்போராயின், இமயம் கூட அவர்கள் காலடியில் தான்...


Parenting tips to fullfill child's wish
Parenting tips to fullfill child's wish


               பெற்றோர் தங்கள் குழந்தையின் கனவை உணர்ந்து, அவர்களுக்கு என்ன வரும், அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து செயல்ப்பட்டீர்கள் என்றால் இந்த உலகில் எந்த ஆசையும் நிராசையாய் போக வாய்ப்பே இல்லை!!!


                  ஒரு மரமானது ஆரம்பத்தில் இருந்து நன்றாக பாதுகாகப்பட்டால் தான் கணி சுவையாக இருக்கும். அதே போல தான் பிள்ளைகளின் வாழ்க்கையும் இப்பொழுது நிதானமாக சிந்தித்து அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதில் சேர்த்து விட்டு எதிர்கால பலனை அனுபவையுங்கள்...  


                    Mark, Society என்று ஓடாமல் பெற்றப் பிள்ளையின் எதிர்காலத்தையும், அவர்களின் சந்தோசத்தையும் பற்றி சிந்தியுங்கள்...!



                               நன்றி!!!

 



1 comment:

Thank you for reading my blog!